சனி, 11 ஏப்ரல், 2009

இணைப்பு வார்த்தைகள்_Connecting Words

ஆங்கிலம் என்பது ஒரு Language. அவ்வளவு தான்.
அதை நீங்க Subject ஆ படிச்சா தெரிஞ்சுக்க மட்டும் தான் முடியும்.
அதையே நீங்க Skill ஆ படிச்சா தான் புலமை பெற முடியும்.

சரி . வாங்க உள்ள போவோம்...

ஆங்கில வாக்கியங்களில், செயல் வார்த்தை ( action word or verb ) இரண்டாவது வார்த்தையாகத்தான் வர வேண்டும்.

வார்த்தைகள் நம் மனதில் உள்ள மொழி சம்பந்தப்பட்ட வளங்களில் ஒன்று . (one kind of linguistic resouces ) ஆங்கில வாக்கியங்களில் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு இடம் உண்டு .
வார்த்தைகளுக்கான சரியான இடத்தை தெரிந்து கொண்டால் நாம் நிறைய வாக்கியங்களை உருவாக்க முடியும். இதற்கு இலக்கண அறிவு அதிகம் தேவையில்லை.
வார்த்தைகளை பற்றிய அறிவு - ஆங்கிலத்தை சுலபமாகப் புரியச்செய்கிறது .


ஆங்கில வாக்கியங்களில் செயல் செய்பவர் மற்றும் செயலை பெறுபவர் அதாவது 1st and 3rd வார்த்தைகள் மிக முக்கியமானவை. கீழ்க்கண்ட இணைப்பு சொற்களை ( Connecting word ) பயன்படுத்தி அவ்வார்த்தைகளை விரிவாக்கம் செய்யலாம்.

who, which, what , that, how, where, why, when....


இவற்றை இணைப்பு சொற்களாகவும் , கேள்வி கேட்கவும் பயன் படுத்தலாம்...

இவற்றை கற்று கொள்வதன் மூலம் உங்கள் மொழி நடையினை வித்தியாசப்படுத்த முடியும்...

who - ஒரு ஆளைக் குறித்து விரிவாக்கம் செய்ய...

- the person who loves me / is / my dad
- the god who protects me / is / my family deity

which - ஒரு பொருளை குறித்து விரிவாக்கம் செய்ய ...

- the book which i have / is / big
- the money which i give you / is / valuable
- the advice which the elders gives us / empower / us

what or that - பார்க்க முடியாத பொருள் குறித்து விரிவாக்கம் செய்ய...

- the talents that we have / are / god given gifts

how or how to - செயலின் செய்முறை குறித்து விரிவாக்கம் செய்ய ...

- the way how to treat them / is / an art
- the method how we learn english / is / new

where - செயல் நடக்கும் இடத்தை விரிவாக்கம் செய்ய ...

- the house where we live / is / modern and comfortable
- the place where we park vehicles / is / a open ground






( இன்னும் வரும் ...)
வாழ்க வளமுடன்