வெள்ளி, 8 மே, 2009

வாக்கியங்களை இணைத்து பேசும் முறை

ஒரு செய்தியுடன் வேறொரு செய்தியை இணைத்து பேசும் முறை
அல்லது
இரண்டு வாக்கியங்களை இணைத்து பேசும் முறை

கடந்தகால வழக்கமான செயல்களைச் சொல்ல....- used to / would
நிகழ்கால வழக்கமான செயல்களைச் சொல்ல....- do / does (3rd singular)

past habitual :-
syntax : subject / used to / verb
example : we used to celebrate all festivels formerly.

present habitual :-
syntax :
I,we,you,they / do / present verb
he, she,it / does / present verb

positive : used to + verb
negative: used not to + verb
question : used you to +verb

வழக்கமான தமிழ் வாக்கியம் (பேச்சுவழக்கு தமிழ் ):

முன்னாடியெல்லாம் தமிழ்லதான் பேசுனோம். ஆனா இப்போ இங்கிலீஷ்ல பேசுறோம்.

சரிசெய்த தமிழ் : ( ஆங்கிலத்தை புரிந்து கொள்ள செயற்கையாக உருவாக்கப்பட்ட தமிழ் வாக்கியம் )

முன்பெல்லாம் வழக்கமாக தமிழில் தான் பேசினோம். ஆனால் தற்போது ஆங்கிலத்தில் பேசுகிறோம்.

in english :

we / used to speak / tamil formerly, but we / speak / english now.

__________________________________________________________________

இரண்டு நிகழ்கால வாக்கியங்களை இணைத்துப் பேச " that " என்னும் இணைப்புச் சொல்லை பயன்படுத்த வேண்டும்.

syntax :
sentance (pr) / that / sentance (pr)

example :
the people say / that / the present govt. ruling well
we feel / that / god has created all things for us

____________________________________________________________________

ஒரு நிகழ்கால வாக்கியத்தையும் , நிகழ்காலத்தில் சொல்லப்பட்ட ஒரு எதிர்கால வாக்கியத்தையும் இணைத்துப் பேச...

syntax:
sentence (pr) / that / sentance ( fu)

example:
i tell you, / that / i will give you all needed helps.
i think, / that / he will invite me too for that function.
i would say, / that / you will live with good values.

_____________________________________________________________________

உங்கள் ஞாபகத்திற்கு இன்று ஒரு வார்த்தை :

formerly __for.mer.ly __ [fawr-mer-lee] ___ , adverb
- in time past ; in an earlier period or age. ; முன்பு


முன்பெல்லாம் எங்களுக்கு இவ்வளவு பிரச்சினை இல்லை .
எங்களுக்கு / இருக்கவில்லை / இவ்வளவு பிரச்சினை / முன்பு
we / hadn't / this much problem / formerly.



மேற்சொன்ன தகவல்கள் அனைத்தையும் படிச்சு வச்சுக்குங்க.....
புதுவித தகவல்களுடன் மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்....
வாழ்க வளமுடன்....

- அன்புடன் ஜெயம்.

ஞாயிறு, 12 ஏப்ரல், 2009

Position ஆ இல்ல PrePosition ஆ

PrePosition:-

ஒரு இடத்திற்கு மேல் , கீழ் , உள், அருகில் , சுற்றிலும் , மத்தியில் , குறுக்காக , எதிராக , அதை நோக்கி , அதோடு என பல POSITION கள் உள்ளன.
அனைத்துச் செயல்களும் இவற்றில் எதாவது ஒரு POSITION ல் நடைபெறும் . இவ்வாறு அந்த POSITION க்குரிய வார்த்தையை செயல் நடக்கும் இடத்தைக் குறிக்கும் வார்த்தைக்கு முன்னால் உபயோகிக்கும் வார்த்தை தான் PREPOSITION.

POSITIONS - செயல் நடக்கும் இடம் - உதாரணம்

UP Positions:-

On - ஒரு பொருளுக்கு மேற்பகுதியில் , அதை தொட்ட நிலையில் , முழுதும் பார்க்கக் கூடிய
வகையில்...
Over - பொருளுக்கு மேல் சற்று இடைவெளியில் ...
Above - மிக உயரத்தில்...
Up - கீழிருந்து மேல் நோக்கி...

DOWN Positions:-
under - பொருளின் கீழ் பகுதியில் - she is sitting under the tree
below - பொருளுக்கு மிகக் கீழாக - the earth is below the sky.
down - மேலிருந்து கீழ் நோக்கி - she is walking down the street.

BY Positions:-
at - ஒரு இடத்தை ஒட்டி - he is at the door.
by- ஒரு இடத்திற்கு அருகாமையில் - she is by the door
near - இடத்திற்கு மிக அருகாமையில் - the moon is near the earth
far - இடத்திற்கு மிக தூரத்தில் - the earth is so far the sun.
beyond - இடத்தை தாண்டி - the school is beyond the theatre

TO Positions:-

towards - ஒரு இடத்தை நோக்கி - he is going towards the house
to - செயல் சென்று அடையும் இடம் - she went to her house.

OTHER Positions:-
in - ஒரு இடத்தில சிறிது பார்க்கக் கூடிய வகையில் -
into - ( அசையும் செயலுக்கு இதை பயன்படுத்த வேண்டும் ) - he is jumping into the river.
round / around - ஒரு இடத்தைச் சுற்றி
across - ஒரு இடத்தின் குறுக்கே...
against - ஒரு பொருளுக்கு எதிராக ...
from.....to - இடம் அல்லது நேரத்தின் ஆரம்பத்தையும் முடிவையும் குறிக்க...
between.....and - இரண்டு இடம் அல்லது நேரத்தின் இடைப்பட்டதைக் குறிக்க...
by - வழியாக...
for - காரணத்திற்க்காக...
of - உயிரற்ற பொருளின் சொந்தத்தைக் குறிக்க..


(இன்னும் வரும்... )

வாழ்க வளமுடன்.

(உங்கள் கருத்துரைகள் இப்பதிப்பை மேலும் புதுப்பிக்க உதவும் ... நன்றி )

சனி, 11 ஏப்ரல், 2009

இணைப்பு வார்த்தைகள்_Connecting Words

ஆங்கிலம் என்பது ஒரு Language. அவ்வளவு தான்.
அதை நீங்க Subject ஆ படிச்சா தெரிஞ்சுக்க மட்டும் தான் முடியும்.
அதையே நீங்க Skill ஆ படிச்சா தான் புலமை பெற முடியும்.

சரி . வாங்க உள்ள போவோம்...

ஆங்கில வாக்கியங்களில், செயல் வார்த்தை ( action word or verb ) இரண்டாவது வார்த்தையாகத்தான் வர வேண்டும்.

வார்த்தைகள் நம் மனதில் உள்ள மொழி சம்பந்தப்பட்ட வளங்களில் ஒன்று . (one kind of linguistic resouces ) ஆங்கில வாக்கியங்களில் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு இடம் உண்டு .
வார்த்தைகளுக்கான சரியான இடத்தை தெரிந்து கொண்டால் நாம் நிறைய வாக்கியங்களை உருவாக்க முடியும். இதற்கு இலக்கண அறிவு அதிகம் தேவையில்லை.
வார்த்தைகளை பற்றிய அறிவு - ஆங்கிலத்தை சுலபமாகப் புரியச்செய்கிறது .


ஆங்கில வாக்கியங்களில் செயல் செய்பவர் மற்றும் செயலை பெறுபவர் அதாவது 1st and 3rd வார்த்தைகள் மிக முக்கியமானவை. கீழ்க்கண்ட இணைப்பு சொற்களை ( Connecting word ) பயன்படுத்தி அவ்வார்த்தைகளை விரிவாக்கம் செய்யலாம்.

who, which, what , that, how, where, why, when....


இவற்றை இணைப்பு சொற்களாகவும் , கேள்வி கேட்கவும் பயன் படுத்தலாம்...

இவற்றை கற்று கொள்வதன் மூலம் உங்கள் மொழி நடையினை வித்தியாசப்படுத்த முடியும்...

who - ஒரு ஆளைக் குறித்து விரிவாக்கம் செய்ய...

- the person who loves me / is / my dad
- the god who protects me / is / my family deity

which - ஒரு பொருளை குறித்து விரிவாக்கம் செய்ய ...

- the book which i have / is / big
- the money which i give you / is / valuable
- the advice which the elders gives us / empower / us

what or that - பார்க்க முடியாத பொருள் குறித்து விரிவாக்கம் செய்ய...

- the talents that we have / are / god given gifts

how or how to - செயலின் செய்முறை குறித்து விரிவாக்கம் செய்ய ...

- the way how to treat them / is / an art
- the method how we learn english / is / new

where - செயல் நடக்கும் இடத்தை விரிவாக்கம் செய்ய ...

- the house where we live / is / modern and comfortable
- the place where we park vehicles / is / a open ground






( இன்னும் வரும் ...)
வாழ்க வளமுடன்

ஞாயிறு, 29 மார்ச், 2009

அங்கில சொற்களஞ்சியம்

ஆங்கிலத்தில் நீங்கள் நிறைய சொற்கள் (VOCABULARY) தெரிந்து வைத்து இருந்தால் தான் சரளமாக பேச முடியும் . அதே நேரத்தில் அதன் உச்சரிப்பும் (PRONUNCIATION) மிக முக்கியம். அதற்க்காகவே இந்த பதிவு.


word :- ethics
split :-( eth.ics )
pronunciation :- [eth-iks)
explain :-a system of moral principles.
தமிழ் அர்த்தம் : நெறிமுறைகள்

இவ்வாறு ஆங்கிலத்தில் உள்ள ஒவ்வொரு சொற்களையும் படித்து புரிந்து கொண்டால் தான் சரளமாக பேசவும் , எழுதவும் முடியும் .
எளிய முறையில் உங்களுக்கு புரிய வைத்து பேச வைப்பதே இந்த பதிவின் நோக்கம்.

( இன்னும் வரும் )

வாழ்க வளமுடன்

ருத்ரன்

மன நல மருத்துவர் திரு . ருத்ரன் அவர்களின் தமிழ் வலை
பதிவை காண http://rudhrantamil.blogspot.com க்கு செல்லவும்

வாழ்க வளமுடன்

புதன், 25 மார்ச், 2009

வரவேற்ப்பு

அன்பு நெஞ்சங்கள்
அருகில் இருந்தாலென்ன....
தொலைவில் இருந்தாலென்ன...

தொலையாத நினைவுகள்
உள்ளவரை தொலைவும்
வெகு அருகில் தான்

வெள்ளி, 21 நவம்பர், 2008

சிங்கம்

வாழ்த்துக்கள்